ரூ.15,000/- தொகுப்பூதியத்தில் தமிழக அரசு வேலை
காலியிடம்:
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் – 01
ஆய்வக நுட்புநர் – 02
காசநோய் சுகாதார பார்வையாளர் – 03
வயது வரம்பு:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி:
ஆய்வக தொழில்நுட்ப துறையில் பட்டதாரி அல்லது டிப்ளமோ பட்டம் முடித்திருக்க வேண்டும்.
இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
காசநோய் சுகாதார பார்வையாளர் கல்வி தகுதி:
12 வது தேர்ச்சி (அ) அறிவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத தொகுப்பூதியம்:
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் – ரூ.15,000/-
ஆய்வக நுட்புநர் – ரூ.10,000/-
காசநோய் சுகாதார பார்வையாளர் – ரூ.10,000/-
தேர்வு செயல் முறை:
தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி மற்றும் தகுதி சான்றிதழ், கணினி சான்று, வாகன ஒட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். தபால் உறையின் மேல் பதவிமின் பெயர் கட்டாயம் குறிப்பிடவேண்டும். ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தேவையான இடத்தில் பணியாற்ற வேண்டியிருக்கும்.
விண்ணப்பத்துடன் ரூ.25/- தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட கவருடன் “துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், இராசா மிராசுதார் மருத்துவமனை வளாகம், தஞ்சாவூர்-613 001. என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது. விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் விளம்பரம் நாளிதழில் வெளிவந்த 10 நாட்களுக்குள்.
Notification Link - Click Here
0 Comments