ஜூலை 23 முதல் ரயில்வேயில் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு தேர்வு
ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு வரும் 23ஆம் தேதி முதல் 7ஆவது
மற்றும் இறுதிக்கட்ட தேர்வு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் உள்ள 35 ஆயிரத்து 281
பணியிடங்களுக்கு இது வரை நடைபெற்ற 6 கட்ட தேர்வுகளை சுமார் ஒன்றே கால் கோடி பேர்
எழுதியுள்ளனர். எஞ்சியுள்ள 2 லட்சத்து 78 ஆயிரம் தேர்வர்களுக்கு ஜூலை 23 முதல்
31ஆம் தேதி வரை 4 நாட்களில் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதோடு கணினி சார்ந்த தேர்வின் முதல் கட்டம் அனைத்து தேர்வர்களுக்கும்
நிறைவடையும். நாடெங்கும் 76 நகரங்களில் இருக்கும் 260 மையங்களில் இந்த தேர்வு
நடைபெறும்.
0 Comments