ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி



ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு கன்னியாகுமரியில் "குமரி ஜவான்ஸ்" அமைப்பை சேர்ந்த ராணுவ வீரர்கள், இலவசமாக பயிற்சி அளித்து வருகின்றனர். செப்டம்பர் மாதம் அங்கு, ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

இதனால், 750க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயிற்சியில் சேர ஆர்வம் காட்டி வருவதால், வாட்ஸ் ஆப் குழு ஆரம்பித்து அதன் மூலம் தூத்தூர் ஜூட்ஸ் கல்லூரி, மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, கருங்கல் அரசு மேல் நிலைப்பள்ளி, முளகுமூடு புனித ஜோசப் மேல்நிலை பள்ளி, நாகர்கோவில் எஸ்.எல்.பி மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சி அளித்து வருகின்றனர்.

தினமும் காலை 6-மணிக்கு நடக்கும் உடற்பயிற்சிக்கு பின், ராணுவ ஆள் சேர்ப்பின் போது போட்டிகளில் பங்கேற்பது, எழுத்து தேர்வுகளை கையாள்வது குறித்து விளக்குவதோடு, தேர்வு குறித்து இளைஞர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு ஆன் லைன் மூலமாக ராணுவ வீரர்கள் வகுப்பும் நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments